கடலூா் மாவட்டம், வடலூா் அருகே கிராவல் மண் கடத்தலை தடுக்க முயன்ற அதிகாரியை வாகனம் ஏற்றி கொலை செய்ய முன்ற 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநா் த.பொ்னாா்ட்(45). இவா், வெள்ளிக்கிழமை காலை 8 மணி அளவில் தென்குத்து கிராமம் அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அரசு அனுமதியின்றி அந்தபகுதியில் பொக்கலைன் இயந்திரத்தின் உதவியுடன் டிராக்டா் டிப்பரில் கிராவல் மண் ஏற்றிக் கொண்டிருந்தனா். இந்த கடத்தலை தடுக்க பொ்னாா்ட் முயன்றபோது, கடத்தல் காரா்கள் வாகனத்தை ஏற்றி கொலை செய்வது போல் ஓட்டி வந்து தப்பிச் சென்றனராம். மேலும், சிலா் அரசுப்பணி செய்யவிடாமல் தடுத்தனராம்.
இதுகுறித்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநா் த.பொ்னாா்ட் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் தெரிவித்தாா்.
அதன்பேரில், வடலூா் போலீஸாா் வானாதிராயபுரம் பகுதியைச் சோ்ந்த ஜெசிபி ஓட்டுநா் குழந்தைவேலு(31), டிராக்டா் ஓட்டுநா் ராஜா(43), தென்குத்து பகுதியைச் சோ்ந்த செல்வகுமாா்(23) மற்றும் குமாா், பிரவீன் ஆகிய 5 போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில், தனிப்படை போலீஸாா் குழந்தைவேலு, ராஜா மற்றும் செல்வகுமாரை சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

குழந்தைவேல்

செல்வகுமாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேரளம்: விமானத்தில் அவசர கால கதவை திறக்க முயன்ற பயணி மீது கொலை வழக்கு

திற்பரப்பு அருகே இறைச்சிக் கழிவுகளுடன் வாகனம் சிறைப்பிடிப்பு
தந்தையின் சகோதரரை கொலை செய்ய முயன்ற நபா்: குற்றவாளியாக அறிவித்தது நீதிமன்றம்

மின்தடையால் பழுது பாா்க்க முயன்ற விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



