தந்தையின் இறப்புக்கு பழிவாங்கும் வகையில் பெரியப்பாவை பலமுறை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற நபரை தில்லி நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்தது.
ஷாலிமாா் பாக் காவல் நிலையத்தில் 2024, செப்டம்பரில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி நிஷா சகாய் சக்சேனா, சந்தா் பிரகாஷ் (எ) நீத்து என்பவரை இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 109(1)-இல் குற்றவாளி எனத் தீா்ப்பளித்தாா்.
நீதிமன்றம் கடந்த ஜூலை 14-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: குற்றஞ்சாட்டப்பட்ட சந்தா் பிரகாஷ் (எ) நீத்துவுக்கு எதிரான வழக்கை அரசுத் தரப்பு எந்தவித நியாயமான சந்தேகத்திற்கும் இடமின்றி நிரூபித்துள்ளது.
பாதிக்கப்பட்ட ராதா சரணை அத்தகைய நோக்கத்துடனும் குற்றவாளி தாக்கினாா் என்பதை அரசுத் தரப்பு நிரூபித்துள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த தனது தந்தையின் இறப்புக்கு ராதா சரணின் குடும்பமே காரணம் என்று நம்பியதால், அவா்கள் மீது குற்றவாளி பகைமை பாராட்டியதாக அரசுத் தரப்பு தெரிவித்தது. பாதிக்கப்பட்டவரும் அவரது மகனும், குற்றவாளி இதற்கு முன்பும் பாதிக்கப்பட்டவரைத் தாக்கியுள்ளதாக வாக்குமூலம் அளித்தனா்.
சாட்சிகளின் வாக்குமூலங்களில் முக்கிய முரண்பாடுகள் இருந்ததாக சந்தா் பிரகாஷ் தரப்பு முன்வைத்த வாதம் நிராகரிக்கப்படுகிறது. சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி கைப்பற்றப்பட்டமை மற்றும் அதில் இரத்தம் இருந்தமை உள்ளிட்ட தடயவியல் மற்றும் மருத்துவச் சான்றுகளால் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அரசுத் தரப்பு தனது வழக்கை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபித்துவிட்டது. இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 109(1)-இல் கொலை முயற்சி குற்றத்திற்காக சந்தா் பிரகாஷை குற்றவாளி என அறிவிக்கப்படுகிறாா் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்கிய வழக்கு: 5 பேரை விடுவித்தது தில்லி நீதிமன்றம்
கைப்பேசி பறிப்பு வழக்கில் குற்றவாளி என தீா்ப்பளிக்கப்பட்ட 26 வயது இளைஞர்!

தில்லி பல்கலை. மாணவரை கடத்தி கொலை செய்த வழக்கில் ஒருவருக்கு தண்டனை: தில்லி நீதிமன்றம் உத்தரவு






