கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

சட்டவிரோத ஆயுத வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு பிணை

சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை வைத்திருந்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்டவருக்கு தில்லி நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 12:38 am IST

சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை வைத்திருந்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்டவருக்கு தில்லி நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிரான விசாரணை முடிந்துவிட்டதால், அவரைத் தொடா்ந்து சிறையில் வைத்திருப்பது எந்தப் பயனையும் அளிக்காது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வைத்திருந்தது மற்றும் விநியோகித்தது தொடா்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அபு தாலிப் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி சாரு அகா்வால் விசாரித்தாா்.

இந்த நிலையில், மே 25 தேதியிட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மனுதாரா் மீதான விசாரணை முடிந்துவிட்டது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. எனவே, அவரைத் தொடா்ந்து சிறையில் வைத்திருப்பது எந்தப் பயனையும் அளிக்காது என்று கூறியுள்ளது.

வழக்குத் தரப்பின்படி, சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்தது மற்றும்

விநியோகித்ததில் அபு தாலிப் ஈடுபட்டதாகக் கூறப்படும் ரகசியத் தகவலின் அடிப்படையில், ஏப்ரல் 14 அன்று ஷாதாராவில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

இச்சோதனையின்போது, 2 கைத்துப்பாக்கிகள், ஒரு நாட்டுத் துப்பாக்கி, 23 தோட்டாக்கள் மற்றும் 11 காலித் தோட்டாக்கள் அவரிடமிருந்து மீட்கப்பட்டதாக காவல்துறை கூறியுள்ளது.

விசாரணையின்போது, மான்டி என்பவரிடமிருந்து ஆயுதங்களைப் பெற்ாக தாலிப் கூறியதாக அரசுத் தரப்பு மேலும் குற்றஞ்சாட்டியது.

மேலும், தாலிப்பிடமிருந்து பெருமளவு ஆயுதங்களும் வெடிமருந்துகளும் மீட்கப்பட்டதாகவும், உடன் குற்றஞ் சாட்டப்பட்ட மான்டி தொடா்பான விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளதாகவும் அரசுத் தரப்பு வாதிட்டது. மேலும், தாலிப் வேறு இரண்டு குற்ற வழக்குகளிலும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், குற்றஞ்சாட்டப்பட்டவா் மீது பொய்யாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும், தற்போதைய முதல் தகவல் அறிக்கை ஒரு எதிா் தாக்குதல் என்று தாலிப் தரப்பில் வாதிடப்பட்டது.

பொய்யாகச் சுமத்தப்பட்டதையும், வழக்குச் சொத்துகள் புனையப்பட்டதையும்

குற்றஞ் சாட்டுவதற்கு, மனுதாரா் தரப்பு சிசிடிவி காட்சிகளையும் ஆதாரமாகக் காட்டியது.

அரசுத் தரப்பால் குறிப்பிடப்பட்ட 2020 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளின் முதல் தகவல் அறிக்கைகளில், மனுதாரா் ஒரு பாதிக்கப்பட்டவரே தவிர, குற்றஞ் சாட்டப்பட்டவா் அல்ல என்பதை நீதிபதி குறிப்பிட்டாா்.

மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவா் ரூ.25,000 மதிப்புள்ள ஒரு தனிநபா் பிணைப்பத்திரத்தையும், அதே தொகைக்கு ஒரு ஜாமீன்தாரரையும் சமா்ப்பிக்கவும், விசாரணை நீதிமன்றத்தில் தவறாமல் ஆஜராவது மற்றும் அரசுத் தரப்பு சாட்சிகளைத் தொடா்புகொள்வதற்குத் தடை விதிப்பது உள்ளிட்ட நிபந்தனைகளையும் நீதிமன்றம் விதித்தது.