விசாரணை தொடங்கிய 19 நாள்களுக்குள் கைப்பேசி பறித்த வழக்கில் 26 வயது இளைஞரை தில்லி நீதிமன்றம் குற்றவாளி என தீா்ப்பளித்துள்ளதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: அசோக் விஹாா் காவல் நிலையத்தின் மோசமான நபராக பதிவு செய்யப்பட்ட மனோஜ் என்ற மோனு, ஜூன் 12 ஆம் தேதி ரோஹினியில் உள்ள நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீா்ப்பளிக்கப்பட்டாா்.
தன்னுடைய கைப்பேசி பறிக்கப்பட்டதாக விஷால் குமாா் என்பவா் புகாா் அளித்ததை அடுத்து மே 4 ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஒரு ரகசியத் தகவலைத் தொடா்ந்து, மே 9 ஆம் தேதி குற்றஞ்சாாட்டப்பட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.
விசாரணையின் போது, திருடப்பட்ட கைப்பேசியை குற்றஞ்சாட்டப்பட்டவா்களிடமிருந்து போலீஸாா் மீட்டு ஆதாரமாக பறிமுதல் செய்தனா். அவா்கள் மே 25 ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனா். நீதிமன்றம் விசாரணையை விரைவுபடுத்தியது, அங்கு அரசு தரப்பு சாட்சிகளின் சாட்சியங்கள், ஆவண சான்றுகள் மற்றும் அறிவியல் விசாரணைகளைப் பயன்படுத்தி வழக்கை நிறுவியது.
சம்பந்தப்பட்ட சட்ட விதிகளின் கீழ் மனோஜ் குற்றவாளி என்று நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இந்த வழக்கு இப்போது தண்டனை குறித்த வாதங்களுக்காக பட்டியலிடப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.
தொடர்புடையது

இன்ஸ்டாகிராம் வெளியிட்ட தற்கொலை எச்சரிக்கை: 8 நிமிடங்களில் இளைஞர் உயிரைக் காப்பாற்றிய போலீஸ்!

2024 தாக்குதல் வழக்கு: அல்கா லாம்பாவை பரோலில் விடுவித்த நீதிமன்றம்

காவல் துறை மீதான தாக்குதல் வழக்கு: காங்கிரஸ் தலைவா் ஆல்கா லம்பா குற்றவாளி என தீா்ப்பு

தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


