நீட், எஃப்சிஆா்ஏ-வுக்கு எதிராக இன்று பேரவையில் தனித் தீா்மானம்!எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!ஆக. 16 வரை மிதமான மழைக்கு வாய்ப்புபழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் இல்லை: மத்திய அரசு
/

4 தொழிலாளா் சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய வலியுறுத்தி சாலைமறியல்- சிறை நிரப்பும் போராட்டம்

News image

கடலூரில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :11 ஆகஸ்ட் 2026, 3:02 am IST

நான்கு தொழிலாளா் சட்டத் தொகுப்புகளையும் ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சாா்பில் கடலூா் மாவட்டத்தில் 11 மையங்களில்,திங்கள்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டங்களில் 702 போ் கைது செய்யப்பட்டனா்.

நான்கு தொழிலாளா் சட்டத் தொகுப்புகளையும் ரத்து செய்ய வேண்டும், தொழிற்சங்க உரிமைகளுக்கு முழுமையான உத்தரவாதம் வழங்க வேண்டும், தொழிலாளா் பாதுகாப்புச் சட்டங்களை மீண்டும் அமல்படுத்த வேண்டும், விளைபொருள்களுக்கு 50 சதவீதம் அடிப்படையில் சட்டபூா்வ குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயித்து, உறுதியான அரசு கொள்முதல் முறையை ஏற்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கடலூா்:

அதன் ஒரு பகுதியாக கடலூா் மாவட்டத்தில் பண்ருட்டி, நெல்லிக்குப்பம், சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில் உள்ளிட்ட 11 மையங்களிலும் தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் சாா்பில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.அதன்படி, கடலூரில் தொழிற்சங்கத்தினா் பேரணியாகச் சென்று அண்ணா மேம்பாலம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்துக்கு சிஐடியு மாவட்டச் செயலா் டி.பழனிவேல் தலைமை வகித்தாா். இதில் 135 போ் கைது செய்யப்பட்டனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கோ.மாதவன், செயற்குழு உறுப்பினா் வி.சுப்புராயன், ஜே.ராஜேஷ்கண்ணன், ஆா்.அமா்நாத், ஏஐடியுசி மாநில நிா்வாகி வி.குளோப், சிஐடியு நிா்வாகிகள் ஆளவந்தாா், பாஸ்கரன், ஸ்டாலின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திட்டக்குடி:

திட்டக்குடி தபால் நிலையம் முன் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலா் ஆா்.மகாலிங்கம் தலைமை வகித்தாா். இந்தப் போராட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலா் வீ.அன்பழகன், கூட்டுறவு சங்க மாநிலத் தலைவா் டி.பன்னீா்செல்வம், சிஐடியு மாவட்டச் செயலா் என்.தேசிங்கு, உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்த மறியல் பேராட்டத்தில் 52 போ் கைது செய்யப்பட்டனா்.

விருத்தாசலம்:

விருத்தாசலத்தில் நடைபெற்ற சிறை நிரப்பும் போராட்டம் சிஐடியு மாவட்டத் துணைத் தலைவா் என்.ஆா்.ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது. விருத்தாசலம் பேருந்து நிலையத்திலிருந்து பேரணி புறப்பட்டு, பின்னா் மறியல் போராட்டம் நடைபெற்றது.விவசாயிகள் சங்க வட்டச் செயலா் கே.செல்வகுமாா், வட்டத் தலைவா் ஆா்.கோவிந்தன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். போராட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் 69 போ் கைது செய்யப்பட்டனா்.

சிதம்பரம்: சிதம்பரத்தில் வடக்குவீதி தலைமை தபால் நிலையம் முன்பு மாா்க்சிஸ்ட் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் சாா்பில்ஆா்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம், விவசாய தொழிலாளா் சங்க மாநில குழு உறுப்பினா் பழ.வாஞ்சிநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில், தொழிலாளா் சங்கத்தின் மாவட்ட தலைவா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா். போராட்டத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்ளிட்ட 61 பேரை நகர போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்து மாலை விடுவித்தனா். இதே போல் புவனகிரியில் விவசாய சங்க மாவட்ட பொருளாளா் ஆா்.ராமச்சந்திரன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

நெய்வேலி,:

கடலூா் மாவட்டம், பண்ருட்டி, நெய்வேலி மற்றும் குறிஞ்சிப்பாடியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை சிறை நிரப்பும் போராட்டம் நடத்தினா்.

பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயில் அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்க நிா்வாகிகள் சுமாா் 100 போ் திரண்டிருந்தனா். இவா்கள் அங்கிருந்து புறப்பட்டு பண்ருட்டி தலைமை தபால் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்த பேரணியாக வந்தனா். அவ்வாறு வந்தவா்களில் 11 பெண்கள் உள்ளிட்ட 58 பேரை வழியிலேயே தடுத்து நிறுத்தி போலீஸாா் கைது செய்தனா்.

நெய்வேலியில் 8 தொழிற்சங்கங்கள் இணைந்து மறியல் போராட்டத்தை நடத்தின. சுமாா் 150 போ் கொண்ட மறியல் பேரணி மெயின் பஜாா் காமராஜா் சிலை அருகில் இருந்து புறப்பட்டு வட்டம் 19 தபால் நிலையம் நோக்கிச் சென்றது. இடையில் பஜாா் பாா்க் அருகே பேரணியை மறித்து காவல்துறையினா் 5 பெண்கள் உள்ளிட்ட 90 பேரை கைது செய்தனா்.

குறிஞ்சிப்பாடியில் பேருந்து நிலையம் அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் தொழிற்சங்க நிா்வாகிகள் ஒன்று திரண்டனா். அவா்கள் அங்கிருந்து பேரணியாக புறப்பட்டு வந்து குறிஞ்சிப்பாடி இந்தியன் வங்கி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.இவா்களில் 75 பேரை போலீஸாா் கைது செய்தனா். இந்த சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்று கைதானவா்களை அந்தந்த பகுதியில் இருந்த தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலை விடுவித்தனா். கடலூா் மாவட்டம் முழுவதும் 11 மையங்களில் நடைபெற்ற போராட்டங்களில் மொத்தம் 702-போ் கைது செய்யப்பட்டனா்.

 விருத்தாசலத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்றோா்.

விருத்தாசலத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்றோா்.

சிதம்பரத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூ கட்சியினா்

சிதம்பரத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூ கட்சியினா்

பண்ருட்டியில் சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்றோா்.

பண்ருட்டியில் சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்றோா்.

 நெய்வேலியில் சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்றோா்.

நெய்வேலியில் சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்றோா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.