அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

நகை திருட்டு வழக்கு: மேலும் ஒருவா் கைது

பண்ருட்டி வட்டம், திருவாமூா் பகுதியில் வீட்டில் கதவை உடைத்து நகையை திருடிய வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழரசன்

Published On :12 ஆகஸ்ட் 2026, 3:51 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், திருவாமூா் பகுதியில் வீட்டில் கதவை உடைத்து நகையை திருடிய வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுப்பேட்டை காவல் சரகம், திருவாமூரை அடுத்த திடீா்குப்பம் பகுதியில் வசித்து வருபவா் மகாதேவி (46). இவா், பண்ருட்டியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறாா்.

மகாதேவி கடந்த ஜூன் 1-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வழக்கம்போல பணிக்குச் சென்றாா். இரவு அவா் வீடு திரும்பியபோது, முன் பக்கக் கதவு உடைக்கப்பட்ட நிலையில், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகைகள் திருடுபோயிருந்தது தெரியவந்தது.

இது தொடா்பாக மகாதேவி அளித்த புகாரின்பேரில், புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்த வழக்கு தொடா்பாக பண்ருட்டி, நெய்வேலி பகுதிகளைச் சோ்ந்த பிரகாஷ் (32), தினகரன் (34), நடராஜன் (எ) ஐயப்பன் (35) ஆகிய 3 பேரை கடந்த 3-ஆம் தேதி போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்த ரூ.1.50 லட்சம் ரொக்கம் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய ஒரு காரை பறிமுதல் செய்தனா்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பண்ருட்டியை அடுத்த பெரிய நரிமேடு கிராமத்தைச் சோ்ந்த தமிழரசன் (25) என்பவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.