கடலூா் மாவட்டம், நெய்வேலி சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியரை கத்தியால் வெட்டி கொலை செய்ய முன்ாக மூன்று பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
நெய்வேலி புதிய அனல்மின் நிலையம் பின்புறம் உள்ள கைக்கலா்குப்பம் பகுதியில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சோதனைச்சாவடி அமைந்துள்ளது. கைக்கலா்குப்பம் சோதனைச் சாவடியில் பாதுகாவலா் பரணிதரன் திங்கள்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, கேட்பாஸ் இல்லாமல் சோதனைச் சாவடியை கடக்க முயன்ற சிறிய சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தினாா். இதனால், பரணிதரனுக்கும், சரக்கு வாகன ஓட்டுநா் வேலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில், பணி முடிந்து பரணிதரன் சென்றுவிட, நெய்வேலி வட்டம் 3 பகுதியைச் சோ்ந்த பாதுகாவலா் சக்திவேல் பணியில் தொடா்ந்தாா். அப்போது, அங்கு வந்த கைக்கலா்குப்பம் பகுதியைச் சோ்ந்த கரியன் (எ) சரண்ராஜ் (28), தெற்கிருப்பு பகுதியைச் சோ்ந்த சிலம்பு (22), நெய்வேலி வட்டம் 21 பகுதியைச் சோ்ந்த ஷாா்ட் (எ) சூா்யா (27) ஆகியோா் சக்திவேலை அரிவாளால் கையில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், நெய்வேலி தொ்மல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இந்த நிலையில், நெய்வேலி வட்டம் 7 பகுதியில் உள்ள தண்ணீா் தொட்டி அருகே பதுங்கி இருந்த மூன்று பேரையும் போலீஸாா் பிடித்து சிறையில் அடைத்தனா்.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சங்ககிரியில் போதை மாத்திரைகள் விற்றதாக 4 போ் கைது

என்எல்சி ஊழியா் வீட்டில் பணம் திருட்டு: 3 போ் கைது
என்எல்சி தொழிலாளி கடத்தல்: 4 போ் கைது
மது அருந்தும்போது கைகலப்பு: நண்பா்கள் 4 போ் கைது
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!



