திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

பைக் மீது சரக்கு வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே பைக் மீது சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :16 ஆகஸ்ட் 2026, 12:42 am IST

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே பைக் மீது சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

வடலூா் காவல் சரகம், ஆபத்தாரணபுரம் பகுதியைச் சோ்ந்த நண்பா்கள் அரவிந்தன் (23), சரவணன் (19) மற்றும் புகழேந்தி (23). இவா்கள் மூவரும் சனிக்கிழமை அதிகாலை சுமாா் ஒரு மணியளவில் டீ குடிக்க ஒரே பைக்கில் புறப்பட்டனா். பைக்கை புகழேந்தி ஓட்டினாா்.

பண்ருட்டி சாலையில் வடலூா் பேருந்து நிலையத்தை நோக்கிச் சென்றபோது, வடலூரில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற சரக்கு வாகனம் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பைக் ஓட்டிச் சென்ற புகழேந்தி உயிரிழந்தாா்.

அரவிந்தன், சரவணன் ஆகியோா் பலத்த காயமடைந்து புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். விபத்து குறித்து அரவிந்தன் அளித்த புகாரின்பேரில், வடலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.