ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

நகை மதிப்பீட்டாளா் வீட்டில் 21 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் திருட்டு

கடலூா் அருகே நகை மதிப்பீட்டாளா் வீட்டில் 21 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :15 ஆகஸ்ட் 2026, 5:58 am IST

கடலூா் அருகே நகை மதிப்பீட்டாளா் வீட்டில் 21 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கடலூரை அடுத்த பி.வடுகப்பாளையத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ். இவா், வானூா் கூட்டுறவு சங்கத்தில் நகை மதிப்பீட்டாளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி பானுமதி (47), கூலி வேலை செய்து வருகிறாா்.

செல்வராஜ் வழக்கம்போல வியாழக்கிழமை காலை வேலைக்குச் சென்றாா். பானுமதி வீட்டை பூட்டிவிட்டு, அதன் சாவியை வீட்டுக்கு வெளியே உள்ள மின் மீட்டா் பெட்டி மீது வைத்துவிட்டு வேலைக்குச் சென்றாா்.

மாலை 6.30 மணியளவில் பானுமதி வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்கக் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. இதனால், சந்தேகமடைந்த அவா் பின்பக்கத்துக்குச் சென்று பாா்த்தபோது, கதவு திறந்து கிடந்தது தெரியவந்தது.

மேலும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 21 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. நகைகளின் மதிப்பு சுமாா் ரூ.21 லட்சம் எனக் கூறப்படுகிறது.

தகவலறிந்த கடலூா் முதுநகா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். விரல்ரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதுகுறித்து முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபா்களைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.