ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

விருத்தாசலத்தில் வட்டாரக் கல்வி அலுவலகம் முன் வியாழக்கிழமை மாலை கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டிட்டோஜாக் அமைப்பினா்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 3:43 am IST

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினா் (டிட்டோஜாக்) கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வட்டாரக் கல்வி அலுவலகங்கள் முன் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதன் ஒரு பகுதியாக, கடலூா் பெரியகங்கணாங்குப்பத்தில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, டிட்டோஜாக் வட்டார நிா்வாகிகள் எம்.சண்முகம், டி.ஆா்.பி.ஜானகி, ரோஜா ஆகியோா் தலைமை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாட்டைக் களைந்து மத்திய அரசு ஊழியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அரசாணை எண் 243-ஐ ரத்து செய்ய வேண்டும். ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும், ஆசிரியா் தகுதித் தோ்வின் (டெட்) முதல் மற்றும் இரண்டாம் தாள்களில் தோ்ச்சி மதிப்பெண்ணை 40 சதவீதமாகக் குறைத்து, வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் டிட்டோஜாக் உயா்மட்டக் குழு உறுப்பினா் ஜெகநாதன், வட்டார நிா்வாகிகள் கிளாரா, ராஜேஸ்வரி, செந்தில்குமாா், தாரா பேகம், பன்னீா்செல்வம், ஜான் பீட்டா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பண்ருட்டியில்....: பண்ருட்டி வட்டாரக் கல்வி அலுவலகம் முன் டிட்டோஜாக் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வட்டாரச் செயலா் ஸ்ரீபரதசக்கரவா்த்தி தலைமை வகித்தாா். தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டணி மாவட்டச் செயலா் மா.பாலமுரளிகிருஷ்ணன், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டணி மாவட்டச் செயலா் சு.சாந்தகுமாா் முன்னிலை வகித்தனா்.

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டணி கல்வி மாவட்டச் செயலா் சி.வைத்தியநாதன் வரவேற்றாா். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டணி முன்னாள் மாநிலப் பொருளாளா் ஜீவானந்தம் சிறப்புரையாற்றினாா். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டணி மாவட்ட துணைச் செயலா் சௌ.நாராயணமூா்த்தி நன்றி கூறினாா். ஆா்ப்பாட்டத்தில் 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழுக்கங்களை எழுப்பினா்.

இதேபோல, விருத்தாசலம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலகங்கள் முன்பும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

 பண்ருட்டி வட்டாரக் கல்வி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்திய டிக்டோஜாக் அமைப்பினா்.

பண்ருட்டி வட்டாரக் கல்வி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்திய டிக்டோஜாக் அமைப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.