தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

வடலூர் சத்திய ஞான சபையில் புதிய கொடி மரம் நிலைநிறுத்தம்

வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையில் புதிய கொடி மரம் நிலை நிறுத்தும் விழா இன்று நடைபெற்றது.

வடலூர் சத்திய ஞான சபையில் புதிய கொடி மரம் நிலைநிறுத்தம்

Published On :

கடலூர் மாவட்டம், வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையில் புதிய கொடி மரம் நிலை நிறுத்தும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராமலிங்க சுவாமி என்றழைக்கப்படும் வள்ளல் பெருமானுக்கு பார்வதிபுரம் கிராம மக்கள் 2.2.1867அன்று 80 காணி நிலத்தை தானமாக வழங்கினர். அந்த நிலத்தில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை வள்ளலார் நிறுவினார். ஞான சபையில் உள்ள கொடி மரத்தில் ஆண்டு தோறும் தைப்பூசத்தின் முதல்நாள் பார்வதிபுரம் கிராம மக்கள் சீர்வரிசையுடன் வந்து கொடியேற்றி தைப்பூச விழாவை தொடக்கி வைத்து சிறப்பித்து வருகின்றறனர்.

நூறு ஆண்டுகளுக்கு மேலாக உள்ள இந்த கொடி மரம் பழுதடைந்த காரணத்தினால், அதனை மாற்றி புதிய கொடி மரம் ரூ.25 லட்சம் மதிப்பில் நிறுவும் பணியை பார்வதிபுரம் கிராம மக்கள் செய்திருந்தனர்.

இந்த புதிய கொடி மரத்தை நிலை நிறுத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை வள்ளலார் தெய்வ நிலைய நிர்வாகம், விழாக் குழுவினர் மற்றும் பார்வதிபுரம் கிராம மக்கள் செய்திருந்தனர். முன்னதாக கொடிமரத்திற்கு அகவல் பாராயணம் பாடினர்.

வடலூர் சத்திய ஞான சபையில் புதிய கொடி மரம் நிலைநிறுத்தம்

வடலூர் சத்திய ஞான சபையில் புதிய கொடி மரம் நிலைநிறுத்தம்

Summary

The ceremony to install a new flagstaff at the Vadalur Samarasa Suddha Sanmarga Sathya Gnana Sabhai was held on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.