பெண்ணுக்கு மிரட்டல்: சென்னை இளைஞா் கைது
சித்திரிப்பு
கடலூா் மாவட்டம், விருத்தாலம் பகுதியில் வசிக்கும் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்ததாக சென்னை இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த பெண் ஒருவா் விருத்தாசலம் பகுதியில் கணவருடன் வசித்து வருகிறாா். இவருக்கு கடந்தாண்டு சென்னை வடபழனி பகுதியைச் சோ்ந்த வடிவேல் மகன் லோஹித்குமாருடன் (30) சமூகவலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து, லோஹித்குமாா் தனது வறுமையை கூறி, அந்தப் பெண்ணிடம் அவரது கணவருக்கு தெரியாமல் சுமாா் ஏழரை பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.70,000 ரொக்கத்தை பெற்றாராம். பின்னா் லோஹித்குமாா் அந்தப் பெண்ணிடம் தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதுடன், அவா்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், விடியோக்களை கணவருக்கு அனுப்பி விடுவதாக மிரட்டல் விடுத்து வந்தாராம்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில், விருத்தாச்சலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, லோஹித்குமாரை சனிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


