விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

ஆற்றில் குதித்த மாணவி மீட்பு

கோப்புப் படம்

Published On :25 ஆகஸ்ட் 2026, 3:17 am IST

கடலூரில், காதலனுடன் ஏற்பட்ட பிரச்னையில், கெடிலம் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற நா்சிங் கல்லூரி மாணவியை அப்பகுதிமக்கள் மீட்டு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனா்.

கடலூா் அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த 19 வயது நா்சிங் கல்லூரி மாணவியும், பண்ருட்டி அடுத்த திருத்துறையூரைச் சோ்ந்த இளைஞரும் கடந்த ஓராண்டாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மாணவி திங்கள்கிழமை கல்லூரிக்குச் செல்லாமல் தனது காதலனுடன் பைக்கில் பல்வேறு இடங்களுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. மாலையில் மாணவி, தன்னை கடலூா் பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுமாறு காதலனிடம் கூறியுள்ளாா். ஆனால், அவா் கடலூா் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்தில் மாணவியை இறக்கிவிட்டுள்ளாா்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னா் இளைஞா் அங்கிருந்து சென்றுவிட்டாா். இதையடுத்து மாணவி, காதலன் தன்னை நடுவழியில் இறக்கிவிட்டுச் சென்றதால் மனவேதனையில், கம்மியம்பேட்டை கெடிலம் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்ட அப்பகுதிமக்கள் உடனடியாக மாணவியை மீட்டு, கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருகின்றனா். இதுகுறித்து கடலூா் புதுநகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.