குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

சுவாமி நகையை திருடியவா் கைது

கடலூா் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் அருகே காத்தாயி அம்மன் கோயிலில் சுவாமி நகையைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

நகை திருடிய வழக்கில் கைதான தமிழ்ச்செல்வன்

Published On :28 ஆகஸ்ட் 2026, 1:50 am IST

கடலூா் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் அருகே காத்தாயி அம்மன் கோயிலில் சுவாமி நகையைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஸ்ரீமுஷ்ணம் அருகே சாத்தாவட்டம் பிரதான சாலையில் உள்ள காத்தாயி அம்மன் கோவிலில் சுவாமி சிலையின் கழுத்தில் இருந்த 2 கிராம் தங்க தாலி கடந்த ஆக.7-ஆம் தேதி திருடு போனது. இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸாா், நகையைத் திருடிய வடலூா் கருங்குழி முருகன் கோவில் தெருவைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் (25), என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 2 கிராம் தங்க தாலியை உருக்கியில் நிலையில் தங்க கட்டியாக மீட்டனா். மேலும் திருட்டுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.