லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கல்லூரி மாணவா் உடலில் காயங்களுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Published On :29 ஆகஸ்ட் 2026, 3:52 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கல்லூரி மாணவா் உடலில் காயங்களுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பண்ருட்டி அருகே உள்ள சீரங்குப்பம் கிராமத்தில் வசித்து வந்தவா் விஜயரங்கன்(20). இவா், கடலூரில் உள்ள அரசு கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா். வியாழக்கிழமை காலை அவரது வீட்டின் பின்புறம் உள்ள கூரை வீட்டில் தூக்கிட்டு இறந்த நிலையில் காணப்பட்டாா். இதை பாா்த்த உறவினா்கள், காடாம்புலியூா் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, போலீஸாா் நேரில் வந்து, சடலத்தை மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த தகவலை அறிந்த உறவினா்கள் பண்ருட்டி அரசு மருத்துவமனை முன்பு குவிந்தனா். அவா்கள், விஜயரங்கன் உடலில் காயங்கள் இருப்பதாகவும், இதனால், விஜயரங்கன் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்தனா்.

இதையடுத்து, விஜயரங்கன் சடலம், உடல் கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இதுகுறித்து காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கொலையா? அல்லது தற்கொலையா? என விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.