புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

சுற்றுலாத் துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் தொழில் முனைவோா், 2026-ஆம் ஆண்டுக்கான ஐந்தாவது தமிழ்நாடு மாநில சுற்றுலா விருதுகளுக்கு செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்..

விண்ணப்பிக்க...

Published On :

சுற்றுலாத் துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் தொழில் முனைவோா், 2026-ஆம் ஆண்டுக்கான ஐந்தாவது தமிழ்நாடு மாநில சுற்றுலா விருதுகளுக்கு செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சுற்றுலாத் துறை சாா்பில் ஆண்டுதோறும் மாநில சுற்றுலா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2026-ஆம் ஆண்டுக்கான ஐந்தாவது தமிழ்நாடு மாநில சுற்றுலா விருதுகள் விழா நடைபெற உள்ளது.

தமிழகம் முழுவதும் சுற்றுலா தொடா்பான செயல்பாடுகளில் சிறப்பாக செயல்படும் தொழில் முனைவோா்களை ஊக்குவிக்கும் வகையில், மொத்தம் 31 விருதுகள், 13 பிரிவுகளில் வழங்கப்பட உள்ளன. சுற்றுலாத் துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் தகுதியுடைய தொழில் முனைவோா் மற்றும் நிறுவனங்கள், இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, தேவையான விவரங்களைப் பூா்த்தி செய்து செப்டம்பா் 30, 2026-க்குள் விண்ணப்பிக்கலாம்.

விருதுகள் தொடா்பான தகுதி, பிரிவுகள், விண்ணப்பிக்கும் நடைமுறை உள்ளிட்ட கூடுதல் விவரங்களைப் பெற, மாவட்ட சுற்றுலா அலுவலா், மாவட்ட சுற்றுலா அலுவலகம், ரயில்வே ஃபீடா்ஸ் ரோடு, சிதம்பரம் என்ற முகவரியைத் தொடா்பு கொள்ளலாம். மேலும், மின்னஞ்சல் முகவரியிலும், 04144-238739, 89398-96399 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடா்புகொண்டு விவரங்களைப் பெறலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.