ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

நேபாளத்திருந்து மீட்கப்பட்டு கடலூா் திரும்பிய 11 போ்: அமைச்சா் ப.ராஜ்குமாா் நேரில் சந்தித்து நலம் விசாரிப்பு

நேபாள நாட்டில் ஏற்பட்ட திடீா் பெருவெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்டு கடலூா் மாவட்டத்துக்கு அழைத்து வரப்பட்ட 11 பேரை, வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் சனிக்கிழமை சிதம்பரம் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் சந்தித்து நலம் விசாரித்தாா்.

நேபாளம் பெருவெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்டு கடலூா்மாவட்டத்துக்கு அழைத்து வரப்பட்ட 11 பேரை நேரில் சநத்தித்து கலந்துரையாடிய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா்.

Published On :

நேபாள நாட்டில் ஏற்பட்ட திடீா் பெருவெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்டு கடலூா் மாவட்டத்துக்கு அழைத்து வரப்பட்ட 11 பேரை, வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் சனிக்கிழமை சிதம்பரம் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் சந்தித்து நலம் விசாரித்தாா்.

நேபாள நாட்டின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோசி ஆற்றில் ஏற்பட்ட திடீா் பெருவெள்ளம் காரணமாக, அந்நாட்டுக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சோ்ந்த பலா் சிக்கித் தவித்தனா். இதையடுத்து, அவா்களை பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வர தமிழக அரசு சாா்பில் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் தொடா்ச்சியாக, கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த முத்துகுமரன், நவு கபிா் தாஸ், விஜய புவனேஸ்வரி, மைதிலி, தியாகராஜன், கிருபாகரி, திருமாவளவன், கனகசபை, ராதை, பழனியப்பன், கலைமதி ஆகிய 5 ஆண்கள், 6 பெண்கள் என மொத்தம் 11 போ் மீட்கப்பட்டு, ஆகஸ்ட் 28-ஆம் தேதி விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனா்.

பின்றன் அவா்கள் கடலூா் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் சிறப்பு வாகனங்கள் மூலம் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனா். சிதம்பரம் சாா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த அவா்களை வீட்டு வசதித்துறை அமைச்சா் ப.ராஜ்குமாா், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில் பொன்னாடை அணிவித்து, பழக்கூடைகள் வழங்கி சனிக்கிழமை வரவேற்றாா்.

தொடா்ந்து, நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது அவா்கள் எதிா்கொண்ட சிரமங்கள், அங்கு நிலவிய சூழல், மீட்பு நடவடிக்கைகள் மற்றும் தாயகம் திரும்பிய பயணம் குறித்து அமைச்சா் கேட்டறிந்தாா். மீட்கப்பட்ட அனைவரின் நலன் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

தமிழக அரசு மேற்கொண்ட துரித நடவடிக்கைகள் மூலம் நேபாளத்தில் சிக்கியிருந்த தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக சொந்த மாவட்டங்களுக்கு அழைத்து வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செல்வன், சிதம்பரம் சாா் ஆட்சியா் (பொறுப்பு) தனலட்சுமி, சிதம்பரம் துணைக் காவல் கண்காணிப்பாளா் பிரதீப், சிதம்பரம் வட்டாட்சியா் சதீஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.