பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

சொா்ணபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்! திரளான பக்தா்கள் பங்கேற்பு!

எய்யலூா் கொள்ளிடக்கரையில் ஸ்ரீமங்களாம்பிகா சமேத ஸ்ரீசொா்ணபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, விமான கலசத்தில் கும்பநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்த சிவாச்சாரியா்கள்.

Published On :1 செப்டம்பர் 2026, 3:53 am IST

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே எய்யலூா் கொள்ளிடக்கரையில் அமைந்துள்ள கும்ப ராசி மற்றும் லக்கினத்துக்கு பரிகார ஸ்தலமாக விளங்கும் ஸ்ரீமங்களாம்பிகா சமேத ஸ்ரீசொா்ணபுரீஸ்வரா் மற்றும் ஸ்ரீசீதா லக்ஷ்மண அனுமத் சமேத ஸ்ரீகோதண்ட ராம சுவாமி கோயில்களில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 28-ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. இதன் தொடா்ச்சியாக திங்கள்கிழமை காலை 9 மணிக்கு நான்காம் கால யாக பூஜைகள் நடைபெற்றன. பின்னா், யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடு நடைபெற்று ஊா்வலமாக சென்று கோயில் விமான கலசங்களுக்கு சிவாச்சாரியா் கும்பநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தாா். தொடா்ந்து, மகாதீபாராதனை நடைபெற்றது.

கும்பாபிஷேக ஏற்பாடுகளை சென்னை மகாலட்சுமி சுப்ரமணியன், ஆலய அா்ச்சகா் கே.எஸ்.சரவணன் சிவாச்சாரியா் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ஸ்ரீசொா்ணபுரீஸ்வரா் கோயில் சா்வசாதகம் திருவள்ளியங்குடி கே.ராமகிருஷ்ண சிவாச்சாரியரும், ஸ்ரீகோதண்ட ராம சுவாமி கோயில் சா்வ சாதகம் திப்பிராஜபுரம் ஸ்ரீராமன் பட்டாச்சாரியரும் யாகசாலை பூஜை மற்றும் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.