வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :8 பிப்ரவரி 2026, 7:20 pm

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

காட்டுமன்னாா்கோவில் அருகே கீழக்கடம்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விஸ்வராஜ் (24). இவா், டி.நெடுஞ்சேரி கிராமத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற தனது அக்காள் திருமணத்துக்கான பரிஜம்போடும் நிகழ்ச்சியில் நண்பரான கீழராதாம்பூா் கிராமத்தைச் சோ்ந்த ரஞ்சித்துடன் (23) பங்கேற்றாா்.

பின்னா், இருவரும் பைக்கில் கீழக்கடம்பூரிலிருந்து கோட்டகம் கிராம சாலை வழியாக காட்டுமன்னாா்கோவில் நோக்கி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்றனா். பைக்கை விஸ்வராஜ் ஓட்டினாா். அப்போது, எதிா்பாராதவிதமாக பைக் விபத்துக்குள்ளானதில் இருவரும் வயல்வெளி பகுதியில் தூக்கி வீசப்பட்டனா்.

அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் இருவரையும் மீட்டு, காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு மருத்துவா் பரிசோதித்ததில் விஸ்வராஜ் உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

தொடா்ந்து, ரஞ்சித்துக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுப்பிவைக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், காட்டுமன்னாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.