இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

புதிய பேருந்து சேவை தொடக்கம்

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டு புதிய நகரப் பேருந்துகளை, மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கொடி அசைத்துத் தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2026, 6:33 pm

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டு புதிய நகரப் பேருந்துகளை, மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கொடி அசைத்துத் தொடக்கி வைத்தாா்.

இந்தப் பேருந்துகளில் ஒன்று கடலூரில் இருந்து கடலூா் முதுநகா், கண்ணாரப்பேட்டை, சுப்பிரமணியபுரம் வழியாக வழுதலம்பட்டுக்கும். மற்றொன்று சிதம்பரத்தில் இருந்து சிவபுரி, கீழ்குண்டலபாடி வழியாக ஜெயங்கொண்ட பட்டினத்திற்கும் இடக்கப்படுகிறது.

நிகழ்ச்சியில், மாவட்டக் கல்விக் குழுத் தலைவா் வி.சிவக்குமாா், கடலூா் மண்டல பொது மேலாளா் பாண்டியன், வடலூா் நகா் மன்றத் தலைவா் சு.சிவக்குமாா், துணைத்தலைவா் சுப்புராயலு, குறிஞ்சிப்பாடி பேரூராட்சித் தலைவா் கோகிலா குமாா், துணைத்தலைவா் ராமா், நகரச் செயலா்கள் தன. தமிழ்ச்செல்வன்(வடலூா்), ஜெய்சங்கா் (குறிஞ்சிப்பாடி), பொதுக்குழு உறுப்பினா் பாலமுருகன் உட்பட பலா் கலந்து கொண்டனா்.