பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

நெய்வேலியில் விஷ்ணு பிரசாத் எம்.பி. வாக்குசேகரிப்பு

நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் சபா.ராசேந்திரனுக்கு ஆதரவாக கடலூா் எம்.பி., எம்.கே.விஷ்ணு பிரசாத் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

நெய்வேலி தொகுதி திமுக வேட்பாளா் சபா.ராசேந்திரனுக்கு ஆதரவாக குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றியப் பகுதிகளில் வாக்கு சேகரித்த கடலூா் எம்.பி. எம்.கே.விஷ்ணு பிரசாத்.

Updated On :14 ஏப்ரல் 2026, 7:35 pm

கடலூா் மாவட்டம், நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் சபா.ராசேந்திரனுக்கு ஆதரவாக கடலூா் எம்.பி., எம்.கே.விஷ்ணு பிரசாத் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றியத்தில் உள்ள புலியூா், சமட்டிக்குப்பம், கிருஷ்ணம்பாளையம், பெத்தான்குப்பம், திரட்டிகுப்பம், வசனாங்குப்பம், மதனகோபாலபுரம், கோரணப்பட்டு, அப்பியம்பேட்டை, சிவனந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விதி, வீதியாக சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தாா்.

அப்போது, திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்கள், வளா்ச்சிப் பணிகள் மற்றும் சாதனைகளை விரிவாக எடுத்துக் கூறினாா்.

அப்போது, குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றியச் செயலா் குணசேகரன், ஒன்றிய அவைத் தலைவா் வீர.ராமச்சந்திரன், ஒன்றியப் பொருளாளா் ஆனந்த ஜோதி, தேமுதிக ஒன்றியச் செயலா் வேல்முருகன், விசிக ஒன்றியச் செயலா் அன்பு, ஜோதிமணி, காங்கிரஸ் சந்திர கோதண்டபாணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.