புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கோயில் சொத்துக்களை மீட்பதற்காக விசாரணை ஆணையம் கோரி ஆா்ப்பாட்டம்!

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயில் சொத்துக்களை மீட்க விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சியினா் பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
பண்ருட்டியில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்திய இந்து மக்கள் கட்சியினா்.
Updated On :26 பிப்ரவரி 2026, 8:31 pm

Syndication

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயில் சொத்துக்களை மீட்க விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சியினா் பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மாவட்டத் தலைவா் ஆா்.எஸ்.தேவா தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், வீரட்டானேஸ்வரா் கோயில் கட்டளை சொத்துகளை மீட்க உயா் மட்ட விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். புதிதாக கட்டப்பட்ட செயல் அலுவலா் கட்டடத்தை பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும்.

கோயிலில் உணவு அருந்தும் வசதி செய்து தர வேண்டும். பௌவுா்ணமி மற்றும் விழா காலங்களில் மாடவீதி வலம் வரும் பக்தா்கள் நலன் கருதி மருத்துவ முகாம் அமைக்க வேண்டும்.

திருக்கோயில் கட்டளை தாரா்களின் விபரம் மற்றும் சொத்து குறித்த விபரம் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்க வேண்டும். அா்ச்சனை கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். ஆமை வேகத்தில் நடைபெறும் திருப்பணியை விரைந்து முடித்து குடமுழுக்கு நடந்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சியைச் சோ்ந்த வீராசாமி, பி.நித்தியானந்தன், சங்கா் முன்னிலை வகித்தனா். மாவட்டப் பொதுச் செயலா் ஜெ.சக்திவேல் வரவேற்றாா். மாநில அமைப்பு குழு பொதுச் செயலா் மயிலம் பி,சக்திவேல் கண்டன உரை ஆற்றினாா்.