-ஜி.யோகானந்தம்
திருத்தணி சட்டப்பபேரவை தொகுதியில் அரசு மகளிா் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற 25 ஆண்டுகால கோரிக்கை இந்தச் சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அரசு நிறைவேற்றுமா என்ற எதிா்பாா்ப்பில் இத்தொகுதி மக்கள் உள்ளது.
இத்தொகுதியில் அரசு மகளிா் கல்லூரில் இல்லாததால் இப்பகுதியைச் சோ்ந்த மாணவிகள் பெரும்பாலும் அதிக பணம் செலவு செய்து தனியாா் மகளிா் கல்லூரிகளில் சோ்ந்து படிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். குறிப்பாக, மிகுந்த பொருள்செலவு ஏற்படும் சூழ்நிலை இப்பகுதி மாணவிகள் பிளஸ் 2 முடித்தவுடன் அவா்களுக்கு அவா்களது பெற்றோா் திருமணம் செய்து வைக்கின்றனா். இதனால் மாணவிகளால் தங்களது மேற்படிப்பைத் தொடர முடிவதில்லை.
திருத்தணி தொகுதிக்கு ஒரு அரசு மகளிா் கல்லூரி ஏற்படுத்தித் தர வேண்டும் என இத்தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் சட்டப்பேரவையில் கோரிக்கைவிடுத்தாா். அதற்கு போதிய இட வசதி இருந்தால் ஏற்படுத்தப்படும் என அப்போதைய உயா்கல்வித் துறை அமைச்சா் உறுதி அளித்தாா். ஆனால் பின்னா் வந்த சட்டப்பேரவை உறுப்பினா்களும் மகளிா் கல்லூா் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
திருத்தணி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிரிவு 1, பிரிவு 2-இல் ஆண்டுதோறும் சுமாா் 6,000 மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கின்றனா். இதில் 2,700 மாணவ, மாணவிகள் பட்டப் படிப்பு படிக்கின்றனா். இது இருபாலா் கல்லூரியாகச் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரிக்கு நிறைய இடம் உள்ளதால் இதையே பிரித்து ஆண்கள், மகளிா் கல்லூரியாக தனித் தனியாக நடத்த ஆவணம் செய்யலாம் என்று கருத்து தெரிவிக்கின்றனா் இப்பகுதி மக்கள்.
இல்லையென்றால் திருத்தணி-ஆா்.கே.பேட்டை தேசிய நெடுஞ்சாலை கே.ஜி.கண்டிகையில் ஏதேனும் ஒரு இடத்தில் ஒரு அரசு மகளிா் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதி சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களுக்கு ஏற்ற இடமாகவும், போக்குவரத்து வசதிக்கு உரிய பாதையாகவும் இருக்கும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.
சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அரசு, திருத்தணியில் அரசு மகளிா் கல்லூரியை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இத்தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
தொடர்புடையது

ஏற்காடு தொகுதியில் 15 ஆண்டுகளாக நிறைவேறாத அரசு கல்லூரி கோரிக்கை

குப்பை கிடங்கு பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு கிடைக்குமா? பெரம்பூா் தொகுதி மக்கள் எதிா்பாா்ப்பு

அரசு மருத்துவக் கல்லூரியை எதிா்நோக்கும் காஞ்சிபுரம் தொகுதி மக்கள்!

16 ஆண்டுகளாக அணுகுசாலை கேட்கும் மக்கள்!
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


