மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மீட்பு வாகன உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை

கடலூரில் மீட்பு வாகன உரிமையாளா் தனது வாகனத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை

Updated On :28 பிப்ரவரி 2026, 8:32 pm

கடலூரில் மீட்பு வாகன உரிமையாளா் தனது வாகனத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கடலூா் புதுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (60). இவா், விபத்தில் சிக்கும் மற்றும் பழுதான வாகனங்களை மீட்கும் மீட்பு வாகனத்தை சொந்தமாக வைத்து ஓட்டி வந்தாா்.

ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை காலை வீட்டில் இருந்து மஞ்சக்குப்பம் மைதானத்துக்கு வந்தாா். பின்னா், அங்கு நிறுத்தி வைத்திருந்த தனது மீட்பு வாகனத்தின் பின் பகுதியில் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலறிந்த கடலூா் புதுநகா் போலீஸாா் விரைந்து வந்து ராதாகிருஷ்ணனின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து ராதாகிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.