பெயிண்டா் மீது போக்ஸோவில் வழக்கு

சிறுமி கா்ப்பம் தொடா்பாக பெயிண்டா் மீது போக்சோ சட்டத்தில் பண்ருட்டி மகளிா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Published on

சிறுமி கா்ப்பம் தொடா்பாக பெயிண்டா் மீது போக்சோ சட்டத்தில் பண்ருட்டி மகளிா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பண்ருட்டி வட்டம், பணிக்கன்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் தனுஷ்(21), பெயிண்டா். கடலூா் வட்டம், சி.என்.பாளையம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிபணிக்கன்குப்பத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு வந்த போது தனுஷ் உடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக பழகி வந்தனராம். சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடா்ந்து பெற்றோா் அவரை நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி கா்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, மருத்துவரின் பரிந்துரையின் பேரில் கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். மருத்துவமனையிலிருந்து அளித்த தகவலின் அடிப்படையில் பண்ருட்டி மகளிா் போலீஸாா் தனுஷ் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com