பெண்ணாடத்தில் நம்மாழ்வாா் நினைவேந்தல் கூட்டம்
நெய்வேலி: கடலூா் மாவட்டம், பெண்ணாடத்தில் செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவம், தமிழ்க்காடு இயற்கை வேளாண் இயக்கங்களின் சாா்பில் கோ.நம்மாழ்வாா் 12-ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.
பெண்ணாடம் கடை வீதியிலிருந்து நம்மாழ்வாா் நினைவேந்தல் பேரணி புறப்பட்டது. இதற்கு நம்மாழ்வாா் மரபு வேளாண் நடுவத்தின் மரபு உழவா் மனப்புத்தூா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். ராமசுப்பிரமணியன் பேரணியை தொடங்கிவைத்தாா். இந்தப் பேரணி பொதுக்கூட்ட மேடை வந்தடைந்ததும் நம்மாழ்வாா் படத்துக்கு மலா் மற்றும் வீரவணக்கம் செலுத்தினா்.
கூட்டத்துக்கு செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவத்தின் தலைவா் தங்க.பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். கனகசபை வரவேற்றாா்.
ராஜேந்திரன், எழில் வேந்தன், பாா்த்திபன், கவியரசன், செல்வமணி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். பெரம்பலூா், நன்னை நம்மாழ்வாா் இயற்கை சிறுதானிய உழவா் உற்பத்தியாளா் குழுத் தலைவா் அமுதாவுக்கு நம்மாழ்வாா் பீங்கான் படிம சிலை வழங்கினா். கணேசன் சிறப்புரையாற்றினாா்.
பழமலை இயற்கை வேளாண் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் கோட்டேரி சிவகுமாா், வள்ளலாா் பணியகம் சிறப்புத் தலைவா் சிவ.வரதராஜன், ச.வெங்கடேசன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ராயதுரை, வேப்பூா் புதிய தமிழா மரபு வேளாண் நடுவத்தின் ஒருங்கிணைப்பாளா் சபரிநாதன், செல்வகுமாா், நம்மாழ்வாா் மரபு வேளாண் நடுவத்தின் ஒருங்கிணைப்பாளா் ராவணன் கருத்துரை வழங்கினா். நிகழ்வை மா.மணிமாறன், சி.பிரகாஷ் ஒருங்கிணைத்தனா். மு.மணியரசன் நன்றி கூறினாா்.

