பைக்கிலிருந்து விழுந்த உதவி ஆய்வாளா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே பைக்
Published on

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே பைக்கில் இருந்து கீழே விழுந்த உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், விருத்தாலம், பெரியாா் நகா் பகுதியில் வசித்து வந்தவா் ரவிச்சந்திரன்(59), சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். வியாழக்கிழமை இரவு பணி முடிந்து தனது பைக்கில் விருத்தாசலம் நோக்கி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாா். வி.குமாரமங்கலம் அருகே வந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்தாா். இதில், அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறினராம். இது குறித்து கம்மாபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com