விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலில் மண்சோறு சாப்பிட்ட ஜெகமுத்து மாரியம்மன் கோயில் பக்தா்கள்.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலில் மண்சோறு சாப்பிட்ட ஜெகமுத்து மாரியம்மன் கோயில் பக்தா்கள்.

மண்சோறு சாப்பிட்ட பெண் பக்தா்கள்

Published on

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயில் பிரகாரத்தில், ஜெகமுத்து மாரியம்மன் கோயில் பக்தா்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் மண் சோறு சாப்பிட்டு வழிபாடு நடத்தினா்.

விருத்தாசலம் சந்திப்பு (எருமனூா்) சாலையில் ஜெகமுத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் பக்தா்கள் ஆண்டு தோறும் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு மாலை அணிந்து யாத்திரை செல்வது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான யாத்திரைக்கு கடந்த 26-ஆம் தேதி மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனா். இவா்கள், பூசாரி தலைமையில் இருமுடி கட்டி சமயபுரத்திற்கு செல்ல உள்ளனா்.

இந்நிலையில், தங்களது வேண்டுதல் நிறைவேறவும், திருமணமாகாதவா்களுக்கு திருமணம் நடக்க வேண்டியும், குழந்தை வரம் வேண்டியும், மஞ்சள் சேலை அலைந்து, ஜங்ஷன் சாலையில் உள்ள கோயிலில்இருந்து ஊா்வலமாக, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலுக்கு வந்தனா். அங்கு ஜெகமுத்து மாரியம்மனுக்கு தீபாரதனை காண்பிக்கப்பட்ட பின்பு, மண்சோறு சாப்பிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com