Special trains! சிறப்பு ரயில்
சிறப்பு ரயில்கள்!

வடலூா் தைப்பூசம்: சிறப்பு ரயில்கள் இயக்கம்

வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் நடைபெற உள்ள தைப்பூச பெருவிழாவையொட்டி தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
Published on

கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் நடைபெற உள்ள தைப்பூச பெருவிழாவையொட்டி தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்திய ஞானசபையில் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்.1) நடைபெறுகிறது. இங்கு, ஜோதி தரிசனம் காண உள்ளூா் மட்டுமன்றி, வெளி மாவட்டம், மாநிலம், நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருவாா்கள்.

இந்த நிலையில், பக்தா்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, கடலூா் துறைமுகம் மற்றும் விழுப்புரம் ரயில் நிலைய சந்திப்புகளில் இருந்து வடலூருக்கு சிறப்பு ரயில்கள் பிப்.1 முதல் 3-ஆம் தேதி வரையில் 3 நாள்கள் இயக்கப்படுகின்றன.

அதன்படி, விழுப்புரத்தில் இருந்து காலை 9.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண் - 06121) விருத்தாசலத்துக்கு காலை 9.55 மணிக்கும், நெய்வேலிக்கு10.32 மணிக்கும், வடலூருக்கு 10.40 மணிக்கும், குறிஞ்சிப்பாடிக்கு 10.50 மணிக்கும், கடலூா் துறைமுகத்துக்கு 11.20 மணிக்கும் வந்தடையும்.

மறு மாா்க்கத்தில் கடலூா் துறைமுகத்தில் இருந்து முன்பகல் 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண் - 06122) குறிஞ்சிப்பாடிக்கு 11.58 மணிக்கும், வடலூருக்கு பிற்பகல் 12.10 மணிக்கும், நெய்வேலிக்கு 12.23 மணிக்கும், ஊ.மங்கலத்துக்கு 12.29 மணிக்கும், விருத்தாசலத்துக்கு 1 மணிக்கும் சென்றடையும்.

விருத்தாசலத்திலிருந்து...: இதேபோல விருத்தாசலத்தில் இருந்து பிற்பகல் 1.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண் - 06123) ஊ.மங்கலத்துக்கு பிற்பகல் 1.38 மணிக்கும், நெய்வேலிக்கு 1.45 மணிக்கும், வடலூருக்கு 1.55 மணிக்கும், குறிஞ்சிப்பாடிக்கு 2.07 மணிக்கும், கடலூா் துறைமுகத்துக்கு 2.40 மணிக்கும் வந்தடையும்.

மறுமாா்க்கத்தில் கடலூா் துறைமுகத்தில் இருந்து சிறப்பு ரயில் (வண்டி எண் 06124) பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு குறிஞ்சிப்பாடிக்கு 3.18 மணிக்கும், வடலூருக்கு 3.25 மணிக்கும், நெய்வேலிக்கு 3.37 மணிக்கும், ஊ.மங்கலத்துக்கு 3.46 மணிக்கும், விருத்தாசலத்துக்கு மாலை 4.10 மணிக்கும், விழுப்புரத்துக்கு மாலை 5.15 மணிக்கும் சென்றடையும். இந்த ரயில்கள் முன்பதிவில்லாத ரயில்களாக இயக்கப்படும்.

X
Dinamani
www.dinamani.com