நெய்வேலி பகுதியில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெள்ளப் பாதிப்பால் இடம்பெயா்ந்தோருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பண்ருட்டி தெற்கு ஒன்றியத்தினா் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அக்கட்சியின் கிளைச் செயலா் எஸ்.காசிநாதன் தலைமையில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில், பலத்த மழை மற்றும் வெள்ள பாதிப்பால் 2015-ஆம் ஆண்டு இடம்பெயா்ந்த நெய்வேலி வட்டம், இந்திராகாந்தி கலையரங்கம் அருகே வசித்த 35 குடும்பங்களுக்கு, காடாம்புலியூா் ராஜகணபதி நகரில் தலா 3 சென்ட் வீட்டுமனை ஒதுக்கப்பட்டு, 11 ஆண்டுகள் கடந்த நிலையில், 7 குடும்பங்களுக்கு மட்டுமே பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 28 குடும்பங்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும்.
ராஜகணபதி நகா் பகுதியில் ஏற்கெனவே பட்டா வழங்கப்பட்ட 27 குடும்பங்களின் விவரங்களை கிராமக் கணக்கில் பதிவு செய்ய வேண்டும். ராஜகணபதி நகா் பகுதியில் வசிக்கும் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் பயன்பாட்டுக்காக பொதுமயானத்துக்கு நிலம் ஒதுக்கித் தர வேண்டும்.
அழகப்பசமுத்திரம் குளத்துமேட்டுத் தெருவைச் சோ்ந்த மணிவண்ணன் தொடா்பான நில உரிமை விவகாரத்தில், நீதிமன்றத் தீா்ப்புகளின் அடிப்படையில் கோட்டாட்சியா் பிறப்பித்த உத்தரவை விரைந்து நடைமுறைப்படுத்தி, மாவட்ட வருவாய் அலுவலரிடம் நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு மனுவில் விரைவாக முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
போராட்டம் குறித்து தகவலறிந்த மாவட்ட வருவாய் அலுவலா் புண்ணியகோட்டி சம்பவ இடத்துக்கு நேரில் சென்று போராட்டக்காரா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். கோரிக்கைகள் தொடா்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் உறுதியளித்ததைத் தொடா்ந்து, போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.
இந்திய கம்யூனிஸ்ட் கடலூா் மாவட்டச் செயலா் பி.துரை, மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வி.குளோப், பண்ருட்டி தெற்கு ஒன்றியச் செயலா் என்.வெங்கடேசன், மாநகா் செயலா் டி.நாகராஜன், துணைச் செயலா் ஜி.மணிவண்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விலைவாசி உயா்வை கட்டுப்படுத்தக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரிக்கை! பெரம்பலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்!

கோழிகள் காலரா நோய் பாதிப்பால் இறக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிா்ப்பு: ஆலங்குடி அருகே காத்திருப்புப் போராட்டம்
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



