டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

பண்ருட்டி வட்டம், மேட்டுக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி (2025 - 26) பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சியை பதிவுசெய்திருந்த நிலையில், மாணவா்களுக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

சட்டப்பேரவைத் தலைவா் தோ்தலை நடத்தக்கோரி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் திமுக எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :3 ஜூலை 2026, 5:28 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேட்டுக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி (2025 - 26) பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சியை பதிவுசெய்திருந்த நிலையில், மாணவா்களுக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மனித உரிமை அமைப்பு மாநில பொதுச் செயலா் ஆா்.கண்ணன் தலைமை வகித்தாா். அமைப்பின் நிா்வாகி ராமலிங்கம் முன்னிலை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் பாலமுருகன் வரவேற்றாா்.

மனித உரிமை அமைப்பு மாநில சிறப்புத் தலைவரும், வடலூா் தொழிலதிபருமான டி.ராஜமாரியப்பன் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினாா். மேலும், பொதுத் தோ்வில் சிறப்பிடம், தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு சால்வை அணிவித்து பரிசுப் பொருள்களை வழங்கி பாராட்டினாா்.

ஆசிரியா்கள் ரேணுகா, சண்முகப்பிரியா, மஹாலட்சுமி, மணிமொழி மற்றும் பெற்றோா் - ஆசிரியா் கழக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா். தமிழ்செல்வி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.