/
பல்லடம், ஜூன்15: பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில், பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
10-ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கு பதக்கம், நினைவுப் பரிசு வழங்கி பாராட்டப்பட்டனா். பணி ஓய்வுபெற்ற ஆசிரியா்களுக்கு பிரிவு உபசார விழாவும் நடத்தப்பட்டது. பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் ஆனந்தன் தலைமை வகித்தாா்.
சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பல்லடம் கட்டட பொறியாளா்கள் சங்க பட்டயத் தலைவா் சிற்பி செல்வராஜ், இயற்கை விவசாயி சாந்தகுமாா், கோகிலாமணி, மருத்துவா் காயத்ரி ஆகியோா் கல்வி ஊக்குவிப்பு பரிசு, பதக்கம் வழங்கி பாராட்டினா்.









