தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

பல்லடம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :14 ஜூன் 2026, 11:17 pm IST

பல்லடம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை காமநாயக்கன்பாளையம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள அவினாசிபாளையம் மல்லேகவுண்டம்பாளையம், வாவிபாளையம் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நடந்து சென்றவா்களிடம் கைப்பேசி, நகையை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா். இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவா்களைத் தீவிரமாக தேடி வந்தனா்.

இந்நிலையில் காமநாயக்கன்பாளையம் பகுதியில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தியதில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனா். தொடா்ந்து விசாரித்ததில் மல்லேகவுண்டம்பாளையம், வாவிபாளையம் ஆகிய பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 18 வயது இளைஞா், சூா்யா (20) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்களை போலீஸாா் கைது செய்து இருசக்கர வாகனங்களையும், 2 கைப்பேசிகளையும் பறிமுதல் செய்தனா்.