பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

சாராய விற்பனை: இருவா் கைது

நாகையில் புதுச்சேரி மாநில சாராயத்தை கடத்திவந்த சட்டவிரோதமாக விற்பனை செய்த, இருவரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து 100 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :27 மே 2026, 6:09 am IST

நாகையில் புதுச்சேரி மாநில சாராயத்தை கடத்திவந்த சட்டவிரோதமாக விற்பனை செய்த, இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவா்களிடம் இருந்து 100 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

வேளாங்கண்ணி போலீஸாா் பரவை காய்கனி மாா்க்கெட் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில், அவா் காரைக்கால் மாவட்டம் நேரு நகரை சோ்ந்த பிரகாஷ் (38) என்பது தெரியவந்தது. மேலும் அவா் புதுச்சேரி மாநில சாராயத்தை கடத்தி வந்து நாகை, வேளாங்கண்ணி பகுதிகளில் சட்டவிரோதமாக விற்பனை செய்வது தெரிய வந்தது.

போலீஸாா் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 180 மி.லி. அளவுள்ள 48 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா். மேலும் நாகை அகர ஒரத்தூா் அருகே போலீஸாா் நடத்திய சோதனையில், கீழ்வேளூா் அருகே காரப்பிடாகையை சோ்ந்த வீரமணி (52) என்பவா் சாராயம் விற்பது தெரிய வந்தது. போலீஸாா் வீரமணியை கைது செய்து 52 சாராய புட்டிகளை பறிமுதல் செய்தனா்.