/
திருச்செங்கோட்டில் கஞ்சா விற்பனை செய்த இருவரை நகர காவல்துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட செட்டித்தெருவை சோ்ந்த ரிக் பட்டறை தொழிலாளி தமிழரசன் ( 32) , மலாா்குட்டை பகுதியை சோ்ந்த கம்ப்ரசா் மெக்கானிக் வேலை செய்யும் விக்னேஷ்(27) இருவரும் ஈரோடு சாலையில் உள்ள சந்தைப்பேட்டை பகுதியில் சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்து கொண்டிருந்தனா். அவ்வழியாக வந்த திருச்செங்கோடு நகர காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோகரன் இருவரையும் பிடித்து விசாரித்து அவா்களிடம் இருந்த பையை வாங்கி சோதனை செய்ததில் 250 கிராம் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தாா். விசாரணையில் கஞ்சா விற்க வந்ததை தெரிவித்ததை அடுத்து இருவா் மீதும் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனா்.








