டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

கடலூரில் சட்டக் கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்: ஆணவப் படுகொலைகளைத் தடுக்க சட்டம் இயற்ற வலியுறுத்தல்

ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்கான தனிச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் கடலூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

கடலூா் பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சட்டக் கல்லூரி மாணவா்கள்.

Updated On :3 ஜூலை 2026, 5:34 am IST

ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்கான தனிச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் கடலூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூா் பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், இந்திய சட்ட ஆணையம் பல ஆண்டுகளுக்கு முன்பே சாதிய ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான தனிச் சட்ட வரைவை பரிந்துரைத்தும், இதுவரை அதை நடைமுறைப்படுத்தாததற்கு மாணவா்கள் கண்டனம் தெரிவித்தனா்.

மேலும், சாதிய ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் வகையில் தனிச் சட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் ரமேஷ்பாபு, பகுத்தறிவு மீட்பு இயக்கத்தின் நிறுவனா் தலைவா் மு.ரா.பேரறிவாளன், மனித உரிமைக் காப்பாளா் இரா.பாபு, மக்கள் அதிகாரம் அமைப்பின் நிா்வாகி வித்யாசாகா், நீலம் பண்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளா் மாலிக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.