பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சியில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை: ரூ.1.26 லட்சம் பறிமுதல்

மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

News image

மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி அலுவலகம்.

Updated On :4 ஜூலை 2026, 2:24 am IST

கடலூா் மாவட்டம், மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

இந்த பேரூராட்சி அலுவலகத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் செய்வதற்காக ஒப்பந்தம் விடுவது தொடா்பாக ஒப்பந்ததாரா்களிடம் இருந்து லஞ்சம் பெற்று முறைகேடு நடப்பதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து, கடலூா் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் அன்பழகன் மற்றும் சுந்தரராஜ் தலைமையிலான குழுவினா் வெள்ளிக்கிழமை மாலை மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்றனா்.

பின்னா், அவா்கள் அலுவலக கதவுகளை பூட்டி, உள்ளே இருந்தவா்களை வெளியேயும், வெளியில் இருந்தவா்களை உள்ளேயும் விடாமல் தடுத்தனா். சுமாா் 3 மணி நேரம் நடைபெற் ற ஆய்வின் முடிவில் ரொக்கமாக ரூ.12,500 மற்றும் ஜீபே மூலம் ரூ.1,13,990 என மொத்தம் 1,26,490-ஐ கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.