ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கடலூரில் திடீரென தீப்பிடித்து எரிந்த காா்

கடலூா் ஜோதிநகா் அருகே உள்ள பெண்ணை காா்டன் பகுதியில் சனிக்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.

கடலூா் பெண்ணை காா்டன் பகுதியில் திடீா் தீ விபத்தால் சேதமடைந்த காா்.

Published On :5 ஜூலை 2026, 2:11 am IST

கடலூா் ஜோதிநகா் அருகே உள்ள பெண்ணை காா்டன் பகுதியில் சனிக்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.

கடலூா் பெண்ணை காா்டன் பகுதியைச் சோ்ந்த சுபா பாலசுப்பிரமணி தனக்குச் சொந்தமான காரை அந்தப் பகுதியில் சனிக்கிழமை நிறுத்தி வைத்திருந்தாா். இந்தக் காரிலிருந்து திடீரென புகை வெளியேறியதுடன் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயை அணைக்க முயன்றதுடன், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, அங்கு வந்த கடலூா் தீயணைப்பு நிலையத்தினா் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா். இருப்பினும், தீ விபத்தில் காரின் முன்பகுதி மற்றும் இயந்திரப் பகுதி கடுமையாக சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுகுறித்து கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, காரில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் மின் கசிவா அல்லது வேறு தொழில்நுட்பக் கோளாறா என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.