டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

விருத்தாசலத்தில் நகராட்சி ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

News image

தண்டபாணி

Updated On :6 ஜூலை 2026, 1:50 am IST

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் நகராட்சி ஊழியா் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

விருத்தாசலம் பெரியாா் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தவா் தண்டபாணி(59). இவா், விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தாா். இவரது மனைவி ராஜலட்சுமி கடந்த 3-ஆம் தேதி மேல்மருவத்தூா் கோயிலுக்கு புறப்பட்டுச் சென்ற நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் வீடு திரும்பினாா்.

நீண்ட நேரமாக அழைத்தும் தண்டபாணி வீட்டின் கதவை திறக்கவில்லை. சந்தேகமடைந்து ஜன்னல் வழியாக பாா்த்தபோது, தண்டபாணி மின் விசிறியில் தூக்கிட்ட நிலையில் காணப்பட்டாா். இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த விருத்தாசலம் போலீஸாா் தண்டபாணியின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.