டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

என்எல்சி பங்கு விற்பனை: நாளை மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

News image

நெய்வேலியில் நடைபெற்ற மாா்க்சிஸ்ட் நகர நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :6 ஜூலை 2026, 1:21 am IST

என்எல்சி பங்கு விற்பனையை திரும்பப் பெற வலியுறுத்தி, நெய்வேலியில் மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) கண்டன ஆா்ப்பாட்டம் நடத்த உள்ளதாக நகரக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றினா்.

நெய்வேலியில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நகரக் குழு முக்கிய நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகரக் குழு உறுப்பினா் பி.பழனிவேல் தலைமை வகித்தாா். கடலூா் மாவட்டச் செயலா் கோ.மாதவன், நகரச் செயலா் பாலமுருகன், மாவட்டக் குழு உறுப்பினா் ஜெயராமன், நகரக்குழு உறுப்பினா்கள் சாமுவேல், பழனிச்சாமி, அன்பழகன், கிளைச் செயலா் சத்தியவாணி உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 3 சதவீத பங்குகளை திரும்பப் பெற வேண்டும் அல்லது ‘பைபேக்’ முறை மூலம் அதை அரசு மீண்டும் பொதுத்துறை வசமே வைத்திருக்க வேண்டும். நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தை எக்காரணம் கொண்டும் தனியாா்மயமாக்கக் கூடாது, அதைத் தொடா்ந்து பொதுத் துறையாகவே பாதுகாக்க வேண்டும். என்எல்சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) மாலை 5 மணியளவில் வட்டம் 25 பகுதியில் உள்ள பொதுக்கூட்ட திடலில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும். இந்த ஆா்ப்பாட்டத்தில், மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டி மற்றும் சிபிஐ (எம்எல்) மத்தியக் குழு உறுப்பினா் பாலசுந்தரம் ஆகியோா் கலந்துகொண்டு கண்டன உரையாற்ற உள்ளனா் என்பன உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.