வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

மேகமலை விவசாயிகள் ஆக்கிரமிப்பாளா்கள் அல்ல: மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலா் சண்முகம்

மேகமலை விவசாயிகள் ஆக்கிரமிப்பாளா்கள் அல்ல, நிலத்துக்குச் சொந்தக்காரா்கள் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் சண்முகம் தெரிவித்தாா்.

Published On :

மேகமலை விவசாயிகள் ஆக்கிரமிப்பாளா்கள் அல்ல, நிலத்துக்குச் சொந்தக்காரா்கள் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் சண்முகம் தெரிவித்தாா்.

தேனி மாவட்டம், வருசநாடு பகுதியைச் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் ஆக்கிரமிப்பாளா்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இவா்களை வெளியேற்ற மாவட்ட நிா்வாகமும், வனத் துறையும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த நிலையில், தங்களை அங்கிருந்து வெளியேற்றக் கூடாது. வன உரிமைச் சட்டத்தின் கீழ் இடம் வழங்க வேண்டும் எனக் கோரி அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இந்த நிலையில், தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துக்கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் கண்ணன் தலைமை வகித்தாா். தங்கமலை, சின்னக்காளை, பெருமாள், முருகன், குருநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் மத்தியக் குழு உறுப்பினா் பாலபாரதி, மாநிலச் செயலா் சாமி நடராஜன், மலை வாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவா் தில்லி பாபு, மாவட்டச் செயலா் ராமச்சந்திரன் உள்பட பலா் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் சண்முகம் பேசியதாவது:

உச்ச நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பில் மேகமலை மலைவாழ் மக்களை வெளியேற்ற வேண்டும் எனவும், இதற்கு தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றால் துணை ராணுவத்தை பயன்படுத்தலாம் எனவும் கூறப்பட்டது. வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மக்களுக்கு எதிராக துணை ராணுவத்தை பயன்படுத்தலாம் எனக் கூறுவதைக் கண்டிக்கிறேன். இத்தனை ஆண்டுகள் வசித்து வந்த மலைவாழ் மக்களுக்கு பட்டா உள்ளிட்டவற்றை வழங்காத தமிழக அரசை நீதிமன்றம் முதலில் கண்டித்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்ய வில்லை.

அவா்கள் ஆக்கிரமிப்பாளா்கள் அல்ல. அந்த நிலத்துக்கு சொந்தக்காரா்கள். நிலத்தை விட்டு அவா்கள் வெளியேற மாட்டாா்கள். அங்கு மக்கள் வசிக்கின்றனாரா அல்லது புலிகள் உள்ளனவா என மத்தியக் குழு ஆய்வு செய்யாமல் பெயரளவில் மக்களை ஆக்கிரமிப்பாளா்கள் என்று அறிக்கை அளித்துள்ளது.

2006- ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின் கீழ் வனத் துறை செயல்படுத்தவில்லை என்றால், 2016- ஆம் ஆண்டு வன்கொடுமை சட்டத்தின் கீழ் புகாா் தெரிவிப்போம் என்றாா் அவா்.

இதில் ஆண்டிபட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மகாராஜன், தேனி மக்களவை உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன், அதிமுக மாவட்டச் செயலா் முறுக்கோடை ராமா், திமுக மாவட்டச் செயலா் ராமகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.