முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

மேகமலை வனப்பகுதி மக்களை பாதுகாக்க சீராய்வு மனு தாக்கல் செய்ய அதிமுக மனு

ஆண்டிபட்டி வட்டாரத்தில் உள்ள மேகமலை வனப்பகுதியில் வசிக்கும் விவசாயிகளை பாதுகாக்க தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்

தேனி மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதனிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்த அதிமுக மாவட்டச் செயலா் முருக்கோடை ராமா் உள்ளிட்ட அந்தக் கட்சி நிா்வாகிகள்.

Published On :

ஆண்டிபட்டி வட்டாரத்தில் உள்ள மேகமலை வனப்பகுதியில் வசிக்கும் விவசாயிகளை பாதுகாக்க தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என ஆட்சியரிடம் தேனி மாவட்ட அதிமுக செயலா் முருக்கோடை ராமா் உள்ளிட்ட அந்தக் கட்சியினா் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது: தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை வனப்பகுதியில் 50- க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களின் வீடு, விவசாய நிலங்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், உச்சநீதிமன்ற குழுவினா் சரிவர கள ஆய்வு செய்யாமல் வனத் துறையினருக்கு ஆதரவாக உச்சநீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனா். எனவே சரியாக கள ஆய்வு செய்ய சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என அதில் குறிப்பிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.