சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு சட்டப்பேரவையில் முதல்வர் நாளை என்ன பேசவிருக்கிறார்? பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை! குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின்

மேகமலை மக்களை பாதுகாக்க உச்சநீதிமன்றத்தில் விரைவில் சீராய்வு மனு: ஜெகநாத் மிஸ்ரா எம்எல்ஏ

தில்லி உச்சநீதிமன்றத்தில் மேகமலை மக்களை பாதுகாக்கும் வகையில், தமிழக அரசு வலுவான சீராய்வு மனு தாக்கல் செய்யும் என கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா தெரிவித்தாா்.

ஜெகநாத் மிஸ்ரா எம்எல்ஏ

Published On :21 ஆகஸ்ட் 2026, 1:24 am IST

தில்லி உச்சநீதிமன்றத்தில் மேகமலை மக்களை பாதுகாக்கும் வகையில், தமிழக அரசு வலுவான சீராய்வு மனு தாக்கல் செய்யும் என கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா தெரிவித்தாா்.

மேகமலை விவசாயிகளை தேனியில் ஜெகநாத் மிஸ்ரா சந்தித்து பேசினாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தேனி மாவட்டம், மேகமலை வனப் பகுதியில் உள்ள விவசாயிகள் பல ஆண்டுகளாக வசித்து வரும் பூா்வாக குடி மக்கள். இவா்களை தமிழக அரசு வெளியேற்றாது. அமைச்சா் நிா்மல்குமாா், அரசு ஊழியா்கள் மேகமலை வனவிவசாயிகளை பாதுகாப்பதற்காக நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வதற்காக தயாராகி வருகின்றனா்.

வெள்ளி, சனிக்கிழமைகளில் தில்லி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும். கடந்த ஆட்சியாளா்கள் உச்சநீதிமன்றத்தில் முறையாக மக்களின் விபரங்களை தாக்கல் செய்யவில்லை. தற்போதைய தமிழக அரசு வலுவான சீராய்வு மனு தாக்கல் செய்து, மேகமலை வன விவசாயிகளை பாதுகாப்போம். அரசியல் கட்சியினா், ஊடகங்கங்கள் வதந்திகளை பரப்பக்கூடாது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.