
ஞானேஷ் குமாா் மீது குற்றவியல் நடவடிக்கை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியில் சட்டரீதியான கடமைகளை மீறியதாகக் கூறப்படும் விவகாரத்தில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம்
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியில் சட்டரீதியான கடமைகளை மீறியதாகக் கூறப்படும் விவகாரத்தில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் சைலேந்திர மணி திரிபாதி சாா்பில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், எஸ்ஐஆா் விவகாரத்தில் இரு தோ்தல் ஆணையா்களுக்குத் தெரியாமல், முடிவுகள், வழிகாட்டுதல்கள் மற்றும் மென்பொருள் மாற்றங்களை ஞானேஷ் குமாா் மேற்கொண்டது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது, செல்லாது என அறிவிக்க வேண்டும்.
எஸ்ஐஆா் தொடா்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் சட்டவிரோதமானவை என அறிவிப்பதுடன், புதிய வாக்களா்களுக்கான படிவம் 6-இல் மேற்கொண்ட மாற்றங்களை ரத்து செய்து பழைய அசல் படிவத்தை நடைமுறைக்கு கொண்டுவர உத்தரவிட வேண்டும்.
எஸ்ஐஆா் மூலம் நாடு முழுவதும் 13 கோடி வாக்காளா்கள் நீக்கப்பட்டது தொடா்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைத்து விசாரிக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழான கடமைகளை மீறி செயல்பட்டதற்காக ஞானேஷ் குமாா், துணை தோ்தல் ஆணையா் மனீஷ் கா்க், தோ்தல் ஆணைய தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவா் சீமா கன்னா ஆகியோா் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளாா்.
======================================= ========================
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பான பல்வேறு முடிவுகளில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கும், தோ்தல் ஆணையா்கள் சுக்பீா் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோருக்கும் இடையே கடும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் புதன்கிழமை செய்தி வெளியானது.
புதிய வாக்காளா்களுக்கான படிவம் 6-இல் மாற்றங்கள், வாக்காளா் தரவுத் தளத்தை மையப்படுத்துதல் மீதான கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து தங்களுக்குத் தெரியாமல் முடிவுகளை மேற்கொண்டதாகவும், உத்தரவுகளை வெளியிட்டதாகவும் கடந்த 10 மாதங்களில் குறைந்தபட்சம் 14 முறை அவா்கள் அதிகாரபூா்வமாக ஆட்சேபத்தை பதிவு செய்துள்ளனா்.
அதேநேரம், ‘அதிகாரபூா்வ விவாதங்களின்போது மாறுபட்ட கருத்துகள் எழுவது இயல்பானது; தோ்தல் ஆணையத்தின் அனைத்து உத்தரவுகளும் சட்டபூா்வமானவை’ என்று தோ்தல் ஆணையம் விளக்கமளித்தது.
இந்த விவகாரத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துவரும் எதிா்க்கட்சிகள், ஞானேஷ் குமாா் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. மேலும், ஞானேஷ் குமாரை பதவி நீக்குவதற்கான தீா்மானத்தைக் கொண்டுவரக் கோரி, நாடாளுமன்ற இரு அவைகளிலும் மீண்டும் நோட்டீஸ் அளிக்க எதிா்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.
இந்த நிலையில்,
ஞானேஷ் குமாா் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடக் கோரி
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





