முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

கேஜரிவால் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நவ. 16ல் விசாரணை!

கேஜரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி தலைவர்களுக்கு எதிரான குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பற்றி..

Arvind Kejriwal

அரவிந்த் கேஜரிவால் - ஏஎன்ஐ

Published On :

நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மாவுக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பும் பதிவுகளை வெளியிட்டதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நவம்பர் 16-ஆம் தேதி விசாரிக்கத் தில்லி நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது.

நீதிபதிகள் நவீன் சாவ்லா மற்றும் அருண் பரத்வாஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கில் தங்கள் பதில்களைத் தாக்கல் செய்ய கேஜரிவால் மற்றும் பிறருக்கு அவகாசம் அளித்தது.

நீதிமன்றம் அவமதிப்பு வழக்கிற்கான முழுமையான ஆவணங்கள், விவரங்கள் தங்களுக்குக் கிடைக்கவில்லை என கேஜரிவாலின் மூத்த வழக்குரைஞர் தெரிவித்தார்.

முழுமையற்றதாகக் கூறப்பட்ட அந்த ஆவணங்களை வழங்குமாறு நீதிமன்றப் பதிவகத்திற்கு உத்தரவிட்ட அமர்வு ஏதேனும் பதில் இருந்தால் நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியது.

நீதிபதி சர்மாவுக்கு எதிராகத் திட்டமிட்டு சமூக ஊடகப் பிரசாரத்தில் ஈடுபட்டதாகக் கூறி, கேஜரிவால், ஆம் ஆத்மி தலைவர் கோபால் ராய், பத்திரிகையாளர் சௌரவ் தாஸ் உள்ளிட்டோர் மீது வழக்குரைஞர் அசோக் சைதன்யா தாக்கல் செய்த தனி நீதிமன்ற அவமதிப்பு மனுவையும் நீதிமன்றம் நவம்பர் 16 ஆம் தேதிக்கு விசாரணைக்காகப் பட்டியலிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.