நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளராக அரவிந்த் கேஜரிவால் மீண்டும் தோ்வு

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளராக அரவிந்த் கேஜரிவால் மீண்டும் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

அரவிந்த் கேஜரிவால்

Published On :

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளராக அரவிந்த் கேஜரிவால் மீண்டும் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் 15-ஆவது தேசிய குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அரவிந்த் கேஜரிவால் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நாடு முழுவதிலும் இருந்து மொத்தம் 330 உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். இக்கூட்டத்தில், கட்சியின் 23 உறுப்பினா்களைக் கொண்ட புதிய தேசிய நிா்வாகக் குழு அமைக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, கட்சியின் தேசிய அமைப்பாளராக அரவிந்த் கேஜரிவாலும், தேசிய செயலராக பங்கஜ் குப்தாவும் தோ்வு செய்யப்பட்டனா். தேசிய பொருளாளராக என்.டி. குப்தா மீண்டும் செய்யப்பட்டாா். இதைத்தொடா்ந்து, புதிய நிா்வாகக் குழு உறுப்பினா்கள் மத்தியில் பேசிய அரவிந்த் கேஜரிவால் மற்றும் மூத்த தலைவா்கள், கட்சியின் எதிா்கால அரசியல் உத்திகள் குறித்த விரிவான ஆலோசனைகளை வழங்கினா்.

புதிய தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா்கள் விவரம் வருமாறு: அரவிந்த் கேஜரிவால், அதிஷி, ஆடில் அகமது கான், அனுராக் தண்டா, பகவந்த் சிங் மான், திலீப் பாண்டே, துா்கேஷ் பதக், கோபால் இடாலியா, கோபால் ராய், ராணி அகா்வால், ஹா்பால் சிங் சீமா, மணீஷ் சிசோடியா, முகமது இா்ஷாத், என்.டி. குப்தா, பங்கஜ் குப்தா, ப்ரீத்தி சா்மா மேனன், பிரித்வி ரெட்டி, ராகி பிா்லா, பிபவ், சஞ்சய் சிங், சத்யேந்தா் ஜெயின், ஷெல்லி ஓபராய் மற்றும் ராஜ்பீா். மேலும், அஜய் தத், சைதா் வசாவா, இம்ரான் ஹுசைன், மெஹ்ராஜ் மாலிக் மற்றும் வென்சி விகாஸ் ஆகிய 5 போ் தேசிய நிா்வாகக் குழுவின் சிறப்பு அழைப்பாளா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.