
எஸ்ஐஆர் மூலம் வாக்குரிமை பறிப்பு: காங்கிரஸ் குற்றச்சாட்டு!
எஸ்ஐஆர் இந்தியர்களின் வாக்குரிமையைப் பறிக்கும் முறை..

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் - file photo
தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் (எஸ்ஐஆர்) நடவடிக்கை இந்தியர்களின் வாக்குரிமையைப் பறிக்கும் முறை என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
தற்போதைய எஸ்ஐஆர் நடவடிக்கையின்போது பெருமளவில் வாக்காளர் பெயர்கள் நீக்கப்படுவது குறித்த பிரச்னையை காங்கிரஸ் எழுப்பிய மறுநாளே இவரது கருத்துகள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,
2022-ல் நடைபெற்ற வாக்காளர் பட்டியலின் முந்தைய சிறப்புத் தீவிரத் திருத்தத்தின்போது இருந்த தகவல்களுடன் தற்போதைய வாக்காளர் விவரங்கள் பொருந்தாத காரணத்தினாலேயே பெரும்பாலான அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.
விவரங்களில் உள்ள முரண்பாடுகள் காரணமாக அறிவிப்பு அனுப்பப்படவுள்ள வாக்காளர்களின் பட்டியலில் மறைந்த பொருளாதார நிபுணர் பிபெக் டெப்ராய் பெயர் இடம்பெற்றிருப்பது குறித்த விமர்சனப் பதிவு ஒன்றுக்குப் பதிலளித்த அவர், உண்மையில், இந்தியர்களின் வாக்குரிமையைப் பறிக்கும் ஒரு செயல்முறைதான் இங்கே நடைபெற்று வருகிறது.
பல்வேறு மாநிலங்களிலும் பெருமளவில் நீக்கப்படும் வாக்காளர் பெயர்கள், சமூக மற்றம் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்களுடையவை என்பதை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் உள்ளதாக அவர் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தேர்தல் ஆணையம் ஜூன் 2025-ல் பிகாரில் எஸ்ஐஆர் செயல்முறையின் முதல் கட்டத்தைத் தொடங்கியதாகவும், அதைத் தொடர்ந்து நவம்பர் 2025-ல் ஒன்பது மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டத்தைத் தொடங்கியது. முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களில் 7.8 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு முந்தைய வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் கணக்கிடும்போது, இந்த நீக்க விகிதம் 13 சதவீதமாக உள்ளது.
2026-ஆம் ஆண்டின் மத்தியில் 16 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் மூன்றாம் கட்டம் தொடங்கப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் மூன்றாம் கட்டப் பணிகளின்போது, 12 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களின் தரவுகளின்படி, மொத்தம் உள்ள 36.06 கோடி வாக்காளர்களில் 6.18 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சாராத வாக்காளர்களைக் குறிவைப்பதற்கான ஒரு தந்திரமே இந்த எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை, இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், 22 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் இந்தத் திருத்த நடவடிக்கையானது, தகுதியற்றவர்கள் மற்றும் ஒரே பெயரில் இடம்பெற்றுள்ள இரட்டைப் பதிவுகளை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கி, சட்டப்படி வாக்களிக்கத் தகுதியுள்ளவர்களை அதில் சேர்க்க உதவும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


”ஒரு கேள்விக்கு கூட அவர் பதில் சொல்லவில்லை!” நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு | BJP | TVK

புதுச்சேரியில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான துறைகள் மாற்றம்; கூடுதல் பொறுப்புகள்






