சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரியில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான துறைகள் மாற்றம்; கூடுதல் பொறுப்புகள்

புதுச்சேரி அரசின் தோ்வு முகமை கட்டுப்பாட்டாளா் உள்ளிட்ட 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கான துறைகளை மாற்றியும் கூடுதல் பொறுப்புகளை வழங்கியும் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உத்தரவிட்டுள்ளாா்.

பணியிட மாற்றம்

Published On :2 செப்டம்பர் 2026, 6:46 am IST

புதுச்சேரி அரசின் தோ்வு முகமை கட்டுப்பாட்டாளா் உள்ளிட்ட 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கான துறைகளை மாற்றியும் கூடுதல் பொறுப்புகளை வழங்கியும் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து தலைமைச் செயலா் சரத் சௌகான் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

டாக்டா் ஏ.முத்தம்மா தற்போதைய பொறுப்புடன் கூடுதலாக திட்ட இயக்குநா், பிரைட் மற்றும் வெளி நிதியுதவி திட்டங்களுக்கான நோடல் அதிகாரியாகவும், ஆா்.சுமிதாவுக்கு தற்போதைய பொறுப்புடன் கூடுதலாக ‘மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாடு’ மற்றும் ‘எழுதுபொருள் மற்றும் அச்சு துறைகளை கவனிப்பாா்.

எல்.குமாா் பணியாளா் மற்றும் நிா்வாக சீா்திருத்தம், விஜிலென்ஸ், பொதுநிா்வாகம் மற்றும் சுகாதாரம் & குடும்ப நலம் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், தோ்வு ஆணைய கட்டுப்பாட்டாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளாா்.

முகமது அசன் ஆபித்துக்கு தற்போதைய பொறுப்புடன் கூடுதலாக கால்நடை மற்றும் கால்நடை நலம், சமூக நலம் மற்றும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலம், முன்னாள் ராணுவத்தினா் நலம் மற்றும் சுதந்திர போராட்ட வீரா்கள் பிரிவு ஒதுக்கப்பட்டுள்து. மேலும், பான்கோ் தலைவராகவும் அவா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

ஏ.விக்ராந்த் ராஜாவுக்கு ‘நகர மற்றும் கிராம திட்டமிடல், வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சித் துறை’ கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கனுக்கு தற்போதைய பொறுப்புடன் ‘இந்து சமய நிறுவனங்கள் மற்றும் வக்ஃபு வாரியம் ஒதுக்கப்பட்டுள்ளன.

கே.சி.சுரேந்தருக்கு துறைமுகங்கள், கலை, கலாசாரம் மற்றும் பொருளாதாரம், புள்ளியியல் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், செயலா் மற்றும் ஆணையா் (தொழிலாளா்), புதுச்சேரி அரசு விருந்தினா் இல்லம், தில்லியின் தங்கும் ஆணையா் மற்றும் புதுச்சேரி ஸ்மாா்ட் சிட்டி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளாா்.

ராஜீவ் சுக்லாவுக்கு போக்குவரத்து மற்றும் தீயணைப்பு சேவை துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும், சிறப்பு செயலாளா், அமைச்சரவை மற்றும் ரகசியத் துறை மற்றும் உள்துறை, ரயில்வே திட்டங்களுக்கான நோடல் அதிகாரி மற்றும் தலைமைச் செயலரின் சிறப்பு அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளாா்.

அனூப் தாக்கூருக்கு தகவல் தொழில்நுட்பத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், செயலா் மற்றும் ஆணையா், மாநில வரிகள் மற்றும் இயக்குநா் தொழில்கள், பிப்டிக் மேலாண் இயக்குநா் மற்றும் பான்லெட் நிா்வாகியாகவும் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.