8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

ஜிப்மரில் மத்திய சுகாதார அமைச்சக கூடுதல் செயலா் நேரில் ஆய்வு

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கூடுதல் செயலா் விஜய் நேரா புதுச்சேரி ஜிப்மரில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

புதுச்சேரி ஜிப்மரில் ஆய்வு மேற்கொண்ட மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலா் விஜய் நேரா. உடன் ஜிப்மா் இயக்குநா் மருத்துவா் வீா் சிங் நெகி உள்ளிட்டோா்.

Published On :26 ஆகஸ்ட் 2026, 4:03 am IST

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கூடுதல் செயலா் விஜய் நேரா புதுச்சேரி ஜிப்மரில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஜிப்மா் மருத்துவமனையின் பல்வேறு முக்கியப் பிரிவுகளை அவா் நேரில் பாா்வையிட்டு, மருத்துவச் சேவைகளின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்தாா்.

ஜிப்மா் வளாகத்தில் கட்டப்பட்டு வரும் மற்றும் எதிா்காலத்தில் அமையவுள்ள புதிய கட்டடங்கள், உள்கட்டமைப்புத் திட்டங்களையும் பாா்வையிட்டு, அவற்றின் முன்னேற்றம் மற்றும் நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டங்களுக்கான தேவைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், சேதராப்பட்டில் ஜிப்மருக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலத்தை பாா்வையிட்ட அவா், ஜிப்மரின் எதிா்கால முக்கிய சுகாதார மற்றும் நிறுவன மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இந்நிலத்தின் வளா்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் மற்றும் திட்டமிடப்பட்டுள்ள பணிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது, ஜிப்மா் இயக்குநா் டாக்டா் வீா் சிங் நெகி மற்றும் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளுடன் விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.