
தில்லி உயர்நீதிமன்றத்தில் 7 புதிய நீதிபதிகள் பதவியேற்பு!
தில்லி உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்றது பற்றி..

தில்லி உயர்நீதிமன்றம் - IANS
தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 7 நீதிபதிகள் பதவியேற்றதையடுத்து, இதையடுத்து மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 50 -ஆக உயர்ந்துள்ளது.
உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் நீதித்துறை அதிகாரிகளாகப் பணியாற்றி வந்த நிவேதிதா அனில் சர்மா, நிஷா சகாய் சக்சேனா, சஞ்சய் சர்மா, பாரத் பராஷர், அதிதி சௌத்ரி, தினேஷ் பட் மற்றும் அருண் பரத்வாஜ் ஆகியோருக்குத் தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்தப் பதவியேற்பு விழாவில், பதவிப் பிரமாணம் செய்து வைத்த பிறகு தலைமை நீதிபதி புதிய நீதிபதிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
நீதிபதிகள் சஞ்சய் சர்மா மற்றும் சக்சேனா ஆகியோர் ஆங்கிலத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட நிலையில், மற்ற 5 பேரும் ஹிந்தியில் பதவிப்பிரமாணம் செய்தனர். இவர்கள் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏழு நீதிபதிகளை நியமிக்குமாறு உச்ச நீதிமன்றக் கொலீஜியம் (நீதிபதிகள் தேர்வுக்குழு) பரிந்துரைத்ததைத் தொடர்ந்து. மத்திய அரசு இவர்களுக்கான நியமன அறிவிப்பை செப்டம்பர் 19 அன்று வெளியிட்டது.
உயர்நீதிமன்றத்தில் நிர்ணயிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை மொத்தம் 60 ஆக உள்ள நிலையில், இன்று பதவியேற்றதோடு உயர்நீதிமன்றத்துக்கு மொத்தம் 50 நீதிபதிகள் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்கத் தோ்தல்! தலைவா் உள்பட 3 இடங்களை தக்க வைத்தது ஏபிவிபி; துணைத் தலைவரானாா் சுயேச்சை வேட்பாளா்!

உச்சநீதிமன்றம், சென்னை, தில்லி உயர்நீதிமன்றத்தில் இன்று (செப். 9) எந்தெந்த வழக்குகள் விசாரணை?





